Tamilவிளையாட்டு

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் – காலியிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

இதேபோல, மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், செர்பியாவின் லாஸ்லோ ஜெரியுடன் மோதினார்.

இதில் காஸ்பர் ரூட் 6-1, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.