X

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் – 6 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீரர், செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-0,7-6 ,(7/5), என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதையடுத்து 6வது முறையாக அவர் இத்தாலியன் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 370வது வாரமாக டென்னிஸ் உலக நம்பர் ஒன் இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

மேலும் இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் , நார்வேயின் காஸ்பர் ரூட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டென்னிஸ் போட்டியில்  1,000வது வெற்றியை அவர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.