Tamilசெய்திகள்

இது ஜனநாயக நாடா? அல்லது கவர்னரின் சர்வாதிகார நாடா? – அமைச்சர் ரகுபதி கேள்வி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை?

இது ஜனநாயக நாடா அல்லது கவர்னரின் சர்வாதிகார நாடா என கேள்வி எழுப்பினார்.