Tamilசினிமா

இசை நிகழ்ச்சியில் பாட்டு பாடி அசத்திய ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் ஜானி டெப். இவர் தனது 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்தார். பின்னர் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பிறகு, ஜானி தன்னை திருமண வாழ்வின் போது கடுமையாகத் தாக்கியது உள்ளிட்ட அவரை பற்றி பல பரபரப்பு குற்றசாட்டுகளை அம்பெர் ஹெர்ட் 2018ஆம் ஆண்டு முன்வைத்து இருந்தார்.

இதற்காக ஜானி நஷ்ட ஈடு தர வேண்டும் என ஆம்பர் ஹேர்ட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து ஜானி டெப் பதிலுக்கு வழக்கு தொடர்ந்தார், அதில் “தனது புகழுக்கு களங்கம் விளைவித்தது உட்பட பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து இதற்கு நஷ்ட ஈடாக அவர் 350 கோடி ரூபாய் தனக்கு தர வேண்டும் என கூறி கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார். அவதூறு வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினாலும், கடந்த சில நாட்களாக வழக்கின் விசாரணை அமெரிக்காவின் பேர்பாக்ஸ் கவுண்டி கோர்ட்டில் நடந்து வந்தது. அது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜானி டெப் தரப்பில் வழக்கின் வாதங்கள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில் ஜானி டெப், இங்கிலாந்து இசை கலைஞர் ஜெஃப் பெக்குடன் இங்கிலாந்தின் ஷெஃபீல்டு-ல் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் திடீரென பங்கேற்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ஜானி, இந்த நிகழ்ச்சியில் பாடல் பாடி ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய செய்தார். ஜானி டெப் இசை கருவிகளுடன் பாடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் உள்ளனர்.