இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது வழக்கு!

பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் ‘ஓ பாரி’ என்ற பாடலை இவரே இசையமைத்து பாடி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இப்பாடலை யூ-டியூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில், இந்து மத உணர்வை புண்படுத்திவிட்டதாக நடிகை கராத்தே கல்யாணி ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பிகினி உடையில் பெண்கள் பாடும்போது பாடலில் ‘ராமா ராமா ஹரே … கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே…’ என வரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இது இந்து மத மக்களின் உணர்வை புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவி ஸ்ரீ பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools