X

இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக 3 வது முறையாக போட்டியிடும் தீனா – இளையராஜா எதிர்ப்பு

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தற்போது இசையமைப்பாளர் தீனா உள்ளார். இந்த சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இரண்டு முறை தலைவராக இருந்த தீனா மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இது குறித்து தீனாவிடம் இளையராஜா பேசியுள்ள ஆடியோ வைரலாகியுள்ளது.

அந்த ஆடியோவில் “திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது. இந்த இசையமைப்பாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தது எம்.பி.ஸ்ரீனிவாசன். இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது. நீ ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக இருந்து விட்டாய்.

மூன்றாவது முறையாகவும் ஏன் போட்டியிடுகிறாய்? அடுத்தத் தலைமுறைக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா? இந்த சங்கத்தில் தற்போது முறைகேடுகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஒரு தலைவராக நீ ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், இதைச் சொல்கிறேன். நீ இரண்டு முறை தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறாய். அந்த மனநிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இளையராஜாவின் இந்த ஆடியோவிற்கு இசையமைப்பாளர் தீனா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “1960-ம் ஆண்டு எம்.பி.ஸ்ரீனிவாசன் போட்ட உத்தரவு இது என்று அண்ணா சொல்கிறார். சங்க விதிமுறைகள் கால மாற்றத்திற்கேற்றபடி மாறும். அதன்படி, ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். இளையராஜாவிடம் யாரோ தவறாக சொல்லி இருக்கிறார்கள். அவரை நேரில் பார்த்து இதுகுறித்து புரிய வைக்கப் போகிறேன். தேர்தல் நிச்சயம் நடக்கும்” என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள

Tags: tamil cinema