இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் சார்லஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முறைப்படி மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். 75 வயதான சார்லஸ் சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற இந்திய மக்களுடன் இணைந்து தாமும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.