இங்கிலாந்து தொழிலாளர் கட்சிக்கு தலைவராகும் இந்திய வம்சாவளி எம்.பி?

இங்கிலாந்து நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பழமைவாத கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தோல்வியைத் தழுவியுள்ள எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரேபி கார்பைன் பதவி விலக வேண்டும் என்று கட்சிக்குள் குரல் வலுத்து வருகிறது. அவரும் இன்னொரு பொதுத்தேர்தலுக்கு கட்சியை நான் வழி நடத்தமாட்டேன் என அறிவித்துள்ளார். இந்த நிலையில் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி அங்கு எழத்தொடங்கி விட்டது. 40 வயதான இந்திய வம்சாவளி பெண் எம்.பி. லிசா நண்டி போட்டியில் குதித்துள்ளார். இதை அவர் நேற்று உறுதி செய்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள விகான் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை இந்தியர், தாயார் ஆங்கிலேயர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools