இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (புதன்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த தொடரில் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து துணை கேப்டனாக செயல்படும் ஜோஸ் பட்லருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்து துணை கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. அனுபவத்தைக் கருத்தில் கொண்டு மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.
இந்த நிலையில், வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.