X

இங்கிலாந்து கடந்த 24 மணி நேரத்தில் 39,906 பேர் கொரோனாவால் பாதிப்பு!

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  எனினும், நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 39,906 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால், மொத்த எண்ணிக்கை 56 லட்சத்து 2 ஆயிரத்து 321 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று 84 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.  இவர்கள், கொரோனா பாதிப்பு முதன்முறையாக ஏற்பட்டு 28 நாட்களில் உயிரிழந்தவர்கள் ஆவர்.  இதனால், அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 980 ஆக உயர்வடைந்து உள்ளது.