இங்கிலாந்து, இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ம் தேதியும், 2-வது டெஸ்ட் வருகிற 13-ந்தேதியும் தொடங்குகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. பூட்டிய மைதானத்திற்குள் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறவித்தது. இதற்கிடையில் பிப்ரவரி 1-ந்தேதியில் (இன்று) இருந்து 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதனால் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் 2-வது டெஸ்டில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் என தமிழ்நாடு கிரக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

முதல் டெஸ்டில் கிளப் உறுப்பினர்கள், மீடியா நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools