இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதியம் உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. அதன்பின் மழை விட்டதால் போட்டி தொடங்குவதற்கான வேலைகளை மைதான ஊழியர்கள் செய்து வந்தனர்.
48 ஓவர்கள் இன்று வீசப்படும் வகையில் போட்டி நடத்தப்படும் என்று நடுவர்கள் அறிவித்தனர். டாஸ் சுண்டக்கூடிய நேரத்தில் மீண்டும் மழை குறுக்கீட்டது. இதனால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் தெரிவித்தனர். ஆகவே, முதல் நாள் ஆட்டம் டாஸ் சுண்டப்படாமலேயே கைவிடப்பட்டது.