Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்திய அணியின் கேப்டனாக பும்ப்ரா தேர்வு

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார். அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. 28 வயதான பும்ரா இதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. மேலும், 1987-ம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற உள்ளார்.