இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – 225 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. ஜோ பேர்ன்ஸ் (47), ஜோ ரூட் (57) சிறப்பாக ஆடினர். மற்றவர்கள் சொதப்பினர். இறுதியில், பட்லர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பட்லர் மேலும் 6 ரன்கள் எடுத்து 70 ரன்னில் ஆட்டமிழந்தார். லீச் 21 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 87.1 ஓவரில் 294 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன்பின், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் லபுஸ்சக்னே 48 ரன்னில் அவுட்டானார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித் அரை சதமடித்தார். அவர் 80 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் நாதன் லயன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டும், சாம் கர்ரன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 69 ரன்கள் முன்னிலை வகிக்க இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.