Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் – முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8/299

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி தலா 32 மற்றும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர், பேட்டிங் செய்த மார்னஸ் அரை சதம் அடித்து 51 ரன்களில் அவுட்டானார்.

பின், ஸ்டீவின் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், டிராவிஸ் ஹெட் 48 ரன்கள், கேமரூன் கிரீன் 16 ரன்கள், அலெக்ஸ் காரே 20 ரன்களும் எடுத்தனர். மிட்செல் ஸ்டார்க் 23 ரன்கள் மற்றும் பாட் கம்மின்ஸ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.