இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 – இந்தியா வெற்றி
இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதன்படி நிர்ணயித்த 20 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்தது. அதிகப்படியாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜோசன் ராய் 40 ரன்னிலும் பட்லர் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வீரர் மலான் 17 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி ஆட்டத்தை மாற்றினர். அந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். பேர்ஸ்டோ 25 ரன்னிலும் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸ்சும் இரண்டாவது பந்தில் இயான் மோர்கனும் வெளியேற இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். முதல் பந்தில் ஜோர்டன் 1 ரன்னும் 2-வது பந்தில் ஆர்ச்சர் பவுண்டரியும் 3-வது பந்தில் சிக்சர் அடிக்க ஆட்டம் பரப்பரப்பானது. 4-வது பந்தில் 2 உதிரிகளை விட்டு கொடுத்தாலும் அடுத்த பந்தில் ஒரு ரன்னை மட்டுமே விட்டு கொடுத்தார். 5-வது பந்தில் ஜோர்டன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.