இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 306 ரன்கள் எடுத்து ஆல் அவுட்

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 58.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 89 ரன்னும், டெக்க்ட் 84 ரன்னும் எடுத்தனர். ஒல்லி போப் 42 ரன்னும், போக்ஸ் 38 ரன்னும் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், சபுத்தி, குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. டாம் பிளெண்டல் மற்றும் கான்வேயின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 300 ரன்களைக் கடந்தது. சிறப்பாக ஆடிய பிளெண்டல் சதமடித்தார். அவர் 138 ரன்னிலும், கான்வே 77 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 306 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 19 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools