X

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் – நியூசிலாந்து முதல் நாள் முடிவில் 5/225

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் லீட்சில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். வில் யங் 20 ரன்னும், கேப்டன் கேன் வில்லியம்சன் 31 ரன்னும், டேவன் கான்வே 26 ரன்னும், ஹென்றி நிகோலஸ் 19 ரன்னும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணி 125 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய டேரில் மிட்செல், பிளெண்டல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் அரை சதம் அடித்தார்.

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 78 ரன்னும், பிளெண்டல் 45 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து சார்பில் பிராட், ஜாக் லீச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.