X

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் – 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் கேஎல் ராகுல், பும்ரா, சமி ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினார். அதிகபட்சமாக ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களை எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ராபின்சன், சாம் கரன், தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.