நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் 27-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன், பிளெட்சர் இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளனர். ஜேமிசனுக்கு இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாளில் பந்துவீசும்போது காயம் ஏற்பட்டது. அவருக்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என்று பயிற்சியாளர் கூறினார்.
பிளெட்சருக்கு இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாளில் ஃபீல்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் பதிலாக பிளேயர் டிக்னர், டேன் க்ளீவர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.