X

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் விலகல்

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் வியாழக்கிழமை (டிசம்பர் 16-ந்தேதி) அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது.

பிரிஸ்பேன் டெஸ்டின்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் 4-வது நாள் ஆட்டத்தின்போது அவர் ஆறு ஓவர்கள் மட்டுமே வீசினார். இந்த நிலையில் பிரிஸ்பேன் டெஸ்டில் ஹேசில்வுட் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக ஜை ரிச்சர்ட்சன் அல்லது மைக்கேல் நேசர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பகல்- இரவு டெஸ்டில் ஹேசில்வுட் அபாரமாக செயல்பட்டுள்ளார். அவர் 32 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். சராசரி 19.90 ஆகும்.