Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் விளையாடுவது சந்தேகம்

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. ஒரு நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

2-வது ஆட்டம் நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் நியூசிலாந்து அணி ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடமாட்டார் என, நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

மேலும், கேன் வில்லியம்சனின் இடது முழங்கையில் உள்ள காயம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றார்.