இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – ஜெய்ஸ்வால் சதத்தால் இந்தியா தேநீர் இடைவேளையில் 3/223 ரன்கள் சேர்த்தது
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களிலும், சுப்மன் கில் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 27 ரன்களிலும் அவுட்டானார்.
இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் தனது 2வது சதத்தை அடித்து அசத்தினார். தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 63 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.