X

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – விராட் கோலிக்கு பதிலாக ரஜத் பட்டிதார் சேர்ப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். விராட் கோலிக்கான மாற்று விரைவில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil sports