இங்கிலாந்தில் பரவும் புது வகை கொரோனா – மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசானை
இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
இது கொரோனா வைரசின் புதிய வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது ஏற்கனவே பரவி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.
இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. மத்திய அரசும் இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. லண்டனில் இருந்து கடந்த 10 நாட்களுக்குள் சென்னை வந்துள்ள பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். வீரியமிக்க புதிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்கிறார்.
கொரோனா ஊரடங்கு டிச.31ந்தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.