இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு?
இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 வீரர்களில் ஒருவருக்கு நெகட்டிவ் வந்த நிலையில் மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது.
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு முன் 20ந்தேதி துவங்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடுத்த மாதம் 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.