X

ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வு அறையில் மூன்று இந்திய வீரர்கள் பெயர் – வைரலாகும் புகைப்படம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று காலை தொடங்கியது.

டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது. அதில் தலைசிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் பட்டியல் இருந்தது. அதில் ஷகிப் அல் ஹசன், டிராவிஸ் ஹெட், சமித் பாட்டீல், ரிச்சி பெனாட், டேனியல் வெட்டோரி மற்றும் சர் கேரி சோபர்ஸ் போன்ற சில பெயர்கள் பட்டியலில் இருந்தது.

இந்த பட்டியலில் அஸ்வின், அக்சர் படேல், 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags: tamil sports