X

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் காதலியை கரம் பிடித்தார்

பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 29 வயதான அவர் பிரிட்டிஷ் நாட்டில் பிறந்த 31 வயதான பெக்கி பாஸ்டன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸில் உள்ள பைரான் பே எனும் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதில் கம்மின்ஸ் உடன் கிரிக்கெட் விளையாடி வரும் சக ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க், ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். கம்மின்ஸ், தனது திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.