ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்- 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடிய டொமினிக் தீம் அதை 6-4 எனக் கைப்பற்றினார். அதோடு 3-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.
4-வது செட்டை கைப்பற்றினால் சாம்பியன் பட்டம் வென்று விடலாம் என்ற நோக்கத்தில் டொமினிக் தீம் களம் இறங்கினார். ஆனால் ஜோகோவிச் அபாரமாக விளையாடி 4-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். அதே உத்வேகத்துடன் ஐந்தாவது செட்டையும் 6-4 எனக்கைப்பற்றி ஜோகோவிச் 6-4, 6-4, 2-6, 6-3, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.