Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி – நடாலை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.

ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *