X

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மெத்வதேவ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்ட ஸ்வரேவுடன் மோதினார்.

முதலில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த 3 செட்களையும் சிறப்பாக ஆடி கைப்பற்றி அசத்தினார். இறுதியில், மெத்வதேவ் 5-7, 3-6, 7-6 (7-4), 7-6 ( 7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், இத்தாலி வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.

Tags: tamil sports