ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ரைபகினா, அரினா சபலெங்கா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர்.

இப்போட்டியில் 7-6 (4), 6-3 என்ற செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ரைபகினா.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், எலெனா ரைபகினா, 5ம் தரநிலை வீராங்கனையான அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools