Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் 4 வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார். இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டிமித்ரோவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.