X

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ரூப்லெவ், பிளிஸ் கோவா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), டேனியல் இவான்சை (இங்கிலாந்து) எதிர் கொண்டார். இதில் ரூப்லெவ் 6-4, 6-2, 6-3, என் நேர் செட் கணக்கில் 25-வது வரிசையில் உள்ள இவான்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 30-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ் கோவா (செக்குடியரசு), 3-வது சுற்றில் கிராச் ஹெர்வாவை (ரஷியா), எதிர் கொண்டார். இதில் பிளிஸ் கோவா 6-4, 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். இன்னொரு ஆட்டத்தில் டோனா வெகிக் (குரோஷியா) 6-2, 6-2 என்ற கணக்கில் நூரியாவை (ஸ்பெயின்), வீழ்த்தினார்.