Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஆண்டி முர்ரே, ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் 9 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சு வீரர் என்ஸோ குவாக்காட் உடன் மோதினார். இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-7 (5-7), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் என்ஸோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் தனாசி கோகிநாகிசுடன் மோதினார். இதில் முர்ரே முதல் இரு செட்களை இழந்தார். அடுத்து சுதாரித்துக் கொண்ட அவர் கடைசி 3 செட்களை கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இறுதியில் முர்ரே 4-6, 6-7, 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.