கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நான்காம் நிலை வீராங்கனையான நவ்மி ஒசாகா (ஜப்பான்)- சுலெஸ்டானா (லாத்வியா) மோதினார்கள்.
இதில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் சுவஸ்டோவாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். கடந்த முறை 4-வது சுற்று வரை நுழைந்ததே இதற்கு முன்பு சிறந்ததாக இருந்தது.
ஒசாகா கால்இறுதியில் 6-வது வரிசையில் இருக்கும். எலீனா சுவிட்டோலினாவை (உக்ரைன்) சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கெய்சை 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
சுவிட்டோலினா தொடர்ந்து 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
மற்ற கால்இறுதி ஆட்டங்களில் சுவிட்டோவா (செக்குடியரசு)- பேர்ட்டி (ஆஸ்திரேலியா), அனஸ்டசியா (ரஷியா)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
இன்னொரு கால்இறுதியில் மோதும் வீராங்கனை விவரம் இன்று பிற்பகல் தெரியும்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா)- மெட்வதேவ் (ரஷியா) மோதுகிறார்கள்.
மற்ற ஆட்டங்களில் நிஷிகோரி (ஜப்பான்)- பஸ்டா (ஸ்பெயின்), கோரிக் (குரோஷியா)- லுகாஸ் பவுலி (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.