X

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – 2வது சுற்றில் மெத்வதேவ், சிட்சிபாஸ் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனுடம் மோதினார். இதில் 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் மெத்வதேவ் வென்றார்.

உலகின் 4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் ரிங்கி ஹிஜிகதாவை (ஆஸ்திரேலியா) வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.