X

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – 4 வது சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்ய வீரர் கச்சனோவுடன் மோதினார்.
இதில் நடால் 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதேபோல், மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மால்டோவாவின் ராது அல்போட்டுடன் மோதினார். இதில் ஸ்வெரேவ் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வென்றார்.