ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – 4 வது சுற்றுக்கு முன்னேறிய செரீனா வில்லியம்ஸ்
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- அனஸ்தசியா பொடபோவா (ரஷியா) மோதினர்.
இதில் செரீனா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
14-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருஜா 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் ஜரினா தியாசை (கஜகஸ்தான்) தோறகடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் சபாலென்சா (பெலாரஸ்), சு-வெய் (தைவான்) ஆகியோர் வென்றனர்.