இந்த வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் நேற்று தொடங்கியது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஏராளமான ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ரபேல் நடால் பொலிவியாவைச் சேர்ந்த ஹுகோ டெலியன்-ஐ 6-2, 6-3, 6-0 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீரரான மெட்வெடேவ் 6-3, 4-6, 6-4, 6-2 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 10-ம் நிலை வீரரான மொன்பில்ஸ் தைவானைச் சேர்ந்த லு யென்னை 6-1, 6-4, 6-2 என எளிதில் வீழ்த்தினார்.
23-ம் நிலை வீரரான நிக் கிர்ஜியோஸ் 6-2, 7(7)-6(3), 7(7)-6(1) என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீரரான டி கோஃபின் 6-4, 6-3, 6-1 என பிரான்ஸ் வீரர் சார்டியை வீழ்த்தினார்.