ஆஸ்திரேலியாவை வீழ்த்த என்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும் – விராட் கோலி கருத்து

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எப்படியாவது வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி விட இந்திய வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியா வெற்றி பெறவேண்டும் என்றால் விராட் கோலியின் பேட்டிங் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா இரண்டு முறை அந்த அணியை வீழ்த்தி உள்ளது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் இடையே நம்பிக்கை அதிகமாக உள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி குறித்து விராட் கோலி கூறியதாவது:

ஆஸ்திரேலியா அணி மிகவும் போட்டித் தன்மை வாய்ந்த அணியாகும். அவர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பு கொடுத்து விட்டாலும் அதை நமக்கு எதிராக கடுமையானதாக்கி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த அணியின் திறன் மிகவும் உயர்ந்தது. இந்த விஷயம் தான் என்னுடைய உத்வேகத்தை அதிகரிக்க காரணம். என்னுடைய ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லவும் இதுதான் காரணம். ஆஸ்திரேலியாவை வீழ்த்த என்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

கடந்த முறை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools