ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி 20 போட்டி – இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது டி20 போட்டியானது ராய்ப்பூர் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

இந்த போட்டியில் நாங்கள் டாசில் மட்டுமே தோல்வியை சந்தித்தோம். அதை தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சரிவை சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களது அணியின் வீரர்கள் இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொருவருமே பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே அனைவரிடமும் பேசினேன். அந்த வகையில் நமது அணியின் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். குறிப்பாக அக்சர் பட்டேல் கடினமான இந்த சூழ்நிலையிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் கூறியதாவது:-

இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் இலக்கினை நோக்கி முன்னேற முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம். இந்த தோல்வியின் மூலம் பல்வேறு பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports