ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இங்கிலாந்து அணியில் மொயின் அலிக்கு பதிலாக ஜோஷ் டங் சேர்ப்பு

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவற்காக கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக முதல் டெஸ்டில் காயமடைந்த மொயின் அலிக்கு பதிலாக ஜோஷ் டங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவர். இங்கிலாந்து பிளேயிங் லெவன்:- பென் டக்கட், ஜேக் க்ராவ்லி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஓலி ராபின்சன், ஜோஷ் டங், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports