ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 வது டெஸ்ட் – 35 ரன்களில் ரோகித் சர்மா அவுட்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன்கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடர்ந்து விளையாடினார்கள். அவர்கள் ஆட்டத்தை நிதானமாக தொடங்கினார்கள்.
மிட்செட் ஸ்டார்க் வீசிய ஓவரில் சுப்மன் கில் 2 பவுண்டரியை அடித்தார். அதே போல் ஸ்டார்க் ஓவரில் ரோகித் சரமா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். நாதன் லயன் பந்துவீச்சில் சுப்மன் கில்லுக்கு எல்.பி.டபிள்யூ அவட் கேட்கப்பட்டது. ஆனால் அவுட் கொடுக்க மறுக்கப்பட்டதால் நடுவர் முடிவை எதிர்த்து ஆஸ்திரேலியா மறுபரிசீலனை செய்தது. இதில் அவுட் இல்லை என்று தெளிவானது.
ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் லபுசேனிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 94 ரன்னாக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார்.