X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம்

ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என பிசிசிஐ குறிப்பிடவில்லை. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குடும்ப பொறுப்புகள் காரணமாக ரோகித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.