ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் – இந்தியா பேட்டிங்
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என முடிந்தது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 5 மணிக்கு மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், விஹாரி ஆகியோர் களம் இறங்கினர்.
3-வது டெஸ்டில் விளையாடும் அணி விவரம் வருமாறு:-
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), மயாங்க் அகர்வால், விஹாரி, புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, இஷாந்த் சர்மா, ஜடேஜா, முகமது சமி
ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட்.
தற்போது வரை இந்திய அணி 125 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.