Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை

இலங்கையில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசாங்கா மற்றும் கேப்டன் கருரத்ணே களமிறங்கினர். நிசாங்கா 23 ரன் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த குசல் மெண்டீஸ் (3 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

மேத்யூஸ்-கருரத்ணே ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடினார். 13 ஓவர்கள் விக்கெட் கொடுக்காமல் தாக்குபிடித்த அந்த ஜோடியை நாதன் லயன் பிரித்தார். கருரத்ணே 28 ரன்கள் இருந்த போது வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தனஞ்சய டி சில்வா 14, சண்டிமால் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

நிதானமாக ஆடி வந்த மேத்யூஸ் 71 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த டிக்வெல்லா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 58 ரன்களை குவித்த அவர் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளையும் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.