Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 4 விக்கெட்களை இழந்து திணறும் இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ், ஹசிப் ஹமீத் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

ஆட்டத்தின் முதல் பந்தில் ரோரி பர்ன்ஸ் மிட்செல் ஸ்டார்க்கிடம் போல்டாகினார். அடுத்து இறங்கிய டேவிட் மலானை 6 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட்டை டக் அவுட்டாக்கினார் ஹேசில்வுட். பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னில் அவுட்டானார்.

இதனால் இங்கிலாந்து அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஹமீதுடன், ஆலி போப் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.