ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆம் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. வார்னர் ரன்ஏதும் எடுக்காமலும், அலேக்ஸ் கேரி 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

கேப்டன் ஆரோன் பிஞ்ச் 33 பந்தில் 40 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்தில் 35 ரன்களும், மேக்ஸ்வெல் 18 பந்தில் 26 ரன்களும் அடித்தனர். பேட் கம்மின்ஸ் 5 பந்தில் 13 ரன்களும், ஆஷ்டோன் அகர் 20 பந்தில் 23 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது.

பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோவ் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஜோஸ் பட்லர் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மலன் 32 பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பட்லர் 54 பந்தில் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையி உள்ளது.

3-வது மற்றும் கடைசி டி20 போட்டி செப்டம்பர் 8 ஆம் தேதி நடக்கிறது. அதன்பின் செப்டம்பர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools