இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடியது. டி20 தொடரில் கேப்டன் மலிங்கா உள்பட 10 பேர் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டனர். ஆனால், இளம் வீரர்கள் கொண்ட இலங்கை அபாரமாக விளையாடி பாகிஸ்தானை 3-0 என வீழ்த்தியது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த 10 பேரில் மலிங்கா உள்பட நான்கு பேருக்கும் மட்டும் இடம் கிடைத்துள்ளது.
மலிங்காவுடன் நிரோஷன் டிக்வெல்லா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
அக்டோபர் 27-ந்தேதி தொடங்கும் இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. லசித் மலிங்கா, 2. குசால் பெரேரா, 3. குசால் மெண்டிஸ், 4. தனுஷா குணதிலகா, 5. அவிஷ்கா பெர்னாண்டோ, 6. நிரோஷன் டிக்வெல்லா, 7. தசுன் ஷனகா, 8. ஷெஹன் ஜெயசூர்யா, 9. பனுகா ராஜபக்சே, 10. ஒஷாடா பெர்னாண்டோ, 11. வனிந்து ஹசரங்கா, 12. சண்டகன், 13. நுவான் பிரதீப், 14. லஹிரு குமாரா, 15. ஐசுரு உடானா, 16. கசுன் ரஜிதா.